Monday, February 24, 2014

த.மி.வா.ஜனதா தொழிற்சங்க வரலாறு

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு
நமது சங்கம்
நமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.

கடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.

கடந்த 1978-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் TNTUC  என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது. 

பின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட்  M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய  முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.

1. Anna Thozhilalar Sangam
2. Central Organaisation of Tamilnadu Electricity Employees  (COTTE)
3. TNEW Federation (INTUC)
4. Tamilnadu Minvariya Janatha Thozhilalar Sangam
5. Tamilnadu Electricity Workers Progressive Union (T.M.T.M. Sangam)

மேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd  / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது. 

எனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது. 

மற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.  

பொதுச் செயலாளர்
த.மி.வா.ஜனதா தொழிலாளர் சங்கம்
சென்னை

No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle