Saturday, January 11, 2014

09.01.2014 அன்று ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு கூட்டத்தில் பேசிய தலைவர்களின் உரையாடல்



09.01.2014 அன்று வேலைப்பளு மற்றும் ஊதிய உயர்வு ஒப்பந்த கூட்டம் மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது.

முதலில் வரவேற்புரைக்கு பின் வாரியத் தலைவர் பேசினார்.. அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ஒப்பந்தத்தில்  சில விஷயங்கள் விடுபட்டிருப்பின் பிறகு கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதனால் பயப்பட வேண்டாம். ஒப்பந்தத்தில் உள்ளவை தவிர மற்றவையும் இருக்கும் என கூறினார்.


அடுத்து தொழிலாளர் ஆணையர் அவர்கள் ஒப்பந்தத்தையும் பணியாளர்களையும் சங்க தலைவர்களையும் பாராட்டி பேசினார்.

கூட்டத்தில் பேசிய அனைத்து சங்க தலைவர்களும் வேலைப்பளு  ஓப்பந்தத்தை பாராட்டி பேசினர். ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு பற்றி சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வரவேற்றனர்.விடுபட்ட சிலவற்றை அவர்கள் தத்தமது உரையில் கீழ்க்காணவருமாறு பேசினர்.

அடுத்து முதலாவதாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளரர் திரு.வி.ராமச்சந்திரன் தமது உரையில் குறிப்பிட்டவை. ஒரு நபர் கமிஷனை அமுல்படுத்தவும், கிரேடு பே 4600 5100 ஆக அதை வாங்கும் அனைவருக்கும் மாற்ற வலியுறுத்தியும், இ.நி.பொ. உ.பொ பதவி உயர்வு ரேஷியோ மாற்ற வேண்டாம் என வலியுறுத்தினார்.

அடுத்து சி.ஐ.டி,யு பொதுச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அவர் தமது உரையில் ஒப்பந்த்தில் பல நல்ல விஷயங்கள் இருப்பதை பாராட்டி, மஸ்தூர்களை களப்பணியாளர்களாக உடன் பணியமர்திடவும், கட்டுமான பிரிவில் மி.பா.ஆ பதவி தொடரப்பட வேண்டும், க..ஆய்வாளர் வேலைப்பளுவில் பக்கம் 17-ல்  11,12 நீக்க வேண்டும், பதவி உயர்வ ரேஷியோ தொடர வேண்டும் என்றார். பகுதி நேர ஊழியர்களுக்கான ஊதிய உயர்வினை பாராட்டி பேசினார்.

அடுத்து அண்ணா தொழிற் சங்க பொதுச் செயலாளர் திரு.டி.விஜயரங்கன் அவரது உரையில் வேலைப்பளு மற்றும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தினை பட்டியலிட்டு முதல்வர் மின்துறை அமைச்சர் அவர்களையும் குட்டிக்கதை ஒன்றினை சொல்லி முதல்வரை  பாராட்டி பேசினார். மற்றும் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைத்துள்ள சோலார் உற்பத்தி, சி.எப்.எல் பல்பு பற்றி கூறி மின்சுமை குறைப்பால் சுமார் 250 மெ.வா. மீதமாவதை குறிப்பிட்டார்.

அடுத்து ஜனதா தொழிற் சங்க பொதுச் செயலாளர் திரு.கு.செல்வராஜ் தனது உரையில் மஸதூர் மற்றும் கணக்கீடடாளர் 2-ம் நிலை பதவிகளை களப்பணி உதவியாளர் மற்றும் கணக்கீட்டாளராக மாற்ற வேண்டும், உதவி நிர்வாக அலுவலர்  பதவிகள் நிரப்பட வேண்டும், செயலகக்கிளையில்  Senior S.O, A.S.O, S.O பதவி உயர்வு மற்றும் பதவிகளை நிரப்புதல், சி.நி.ஆ.மு பதவி உயர்வு அனைத்து பிரிவுகளுக்கு வழங்க, 145 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்புதலான கருணைத் தொகை வழங்காததை வழங்கவும் அவர்களை மஸ்தூர்களாக நியமித்தல், ஒரு நபர் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்துவது, ரேஷியோ தொடர மற்றும் அதனை பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்திட, எம்.ஆர்.டி பிரிவுகள் மீண்டும் அனுமதித்தல், வருவாய் மேற்பார்வையாளர் வேலைப்பளு குறைத்தல், போன்றவற்றை குறிப்பிட்டு பேசினார்.

அடுத்து காங்கிரஸ் சங்க பொதுச் செயலாளர் திரு.டி.வி.சேவியர் அவர்கள் தமது உரையில் சி.நி.ஆ.மு பதவி உயர்வு அனைத்து பிரிவுகளுக்கு வழங்க, A.S.O, S.O பதவி உயர்வுபதவி உயர்வு கால வரையறை கணக்கீட்டு ஆய்வாளர் மற்றும் வருவாய் மேற்பார்வையாளரருக்கு  நீக்குதல், ஒரு நபர் கமிஷன் அமுல்படுத்துதல் பற்றி பேசினார்.

அடுத்து காங்கிரஸ் சங்க சொர்ணராஜ் தமது உரையில் ஒப்பந்த தொழிலாளரை மஸ்தூராக பணியமர்த்திட கோரினார்.

அடுத்து TNEB Engineers Sangam பொதுச் செயலாளர் திரு.வி.அசோக்குமார் தமது உரையில் ஒப்பந்தத்தில் உள்ள Ratio தொடர வேண்டும் எனவும், தொ.நு.உதவியாளர் தர ஊதியம் 2700லிலுந்து 2800 ஆக உயர்ததவும், ஓரு குறிப்பிட்ட  தர ஊதியங்கள் தொடரவும் பாகுபாடு இல்லாநிலை தொடரவும், Ratio தொடர்பாக நடந்தவற்றை விளக்கியும் பேசினார்.

அடுத்து  N.L.O தலைவர் தமது உரையில் காலி பணியிடங்களை நிரப்பிடவும், காலியாகவுள்ள 50000 இடங்களில் வருடம் 10000 இடங்கள் நிரப்புவதை தொடரவும், 42  A.T.O. பதவிக்கு நன்றி எனவும், கணக்கு, நிர்வாகம், பணியிடங்கள் நிரப்புதல், முதுநிலை கணக்கு அலுவலர் பணியிடங்கள் உருவாக்கிட, தொகுப்பு ஊதியம் 7500 ஆக உயர்த்திட., களப்பணியாளர் தர ஊதியம் உயர்த்திட , Re-Option வழங்கிட, பணிக்காலத்தில் 3 பதவி உயர்வு வழங்கிட, கணக்கு பிரிவுகள் பதவிகள் மீண்டும் அமைத்திட, ஒவ்வொரு திட்டத்திலும் H.T. மின் இணைப்புகள் ;அதிகமாவதால் அப் பணியிடத்திற்கு புதிதாக ஒரு உதவி கணக்கு அலுவலர் பதவி உருவாக்கிட கோரினார்.

அடுத்து ஐக்கிய சங்க மாநிலத் தலைவர் திரு.எம்.சுப்பிரமணியன் தமது உரையில் பயிற்சி பணிக்காலம் பற்றி குறிப்பிடுகையில் வாரியத் தலைவர் மற்றும் மின்துறை அமைச்சர் அவர்கள் குறிக்கிட்டனர். சில மணித்துளிகள் பேச்சு தடைபட்டது. பயிற்சி பணிக்காலம் பற்றி குறிப்பிட்டு பேச முற்பட்டார். அவரது கேள்வி மற்றும் கோரிக்கை பற்றி அவர் கேட்டது தொடர்பாக விளக்கம் சரியாக உள்ளதாக இருவரும் குறிப்பிட்டதை  தொடர்ந்து அவர் தன்னுடைய கருத்தினை கூற இயலாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது., தொடக்க நிலை பல பதவிகள் உடனடியாக நிரப்பிடவும், ரேஷியோ தொடர மற்றும் அதனை பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்திடவும், தர ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கிடவும் பாகுபாடற்ற தன்மை இருக்கவும், வாகனத்தில் செல்ல வாகனப்படி பெட்ரோல் அலவன்ஸ் வழங்கிடவும் கோரினார்.

அடுத்து பாரதீய மஸ்தூர் சங்க திரு. முரளிகிருஷ்ணன் தமது உரையில் வேலைப்பளுவில் கவராகாத சில இடங்களை பற்றி குறிப்பிடபடவில்லை எனவும், சென்னையில் எடுக்கப்படும் மின் இணைப்புகள் ரீடிங் தனியாகவும் மற்ற இடங்களில் ரீடிங் தனியாகவும் வேலைப்பளுவில் குறிப்பிடாததை வலியுறுத்தியும், வருவாய் மேற்பார்வையாளர் வேலைப்பளுவில் சிலவற்றை நீக்க கோரியும், பே அனாமலி பழையவைகள் பிடித்தம் செய்வதை மீண்டும்  Re-option கேட்க கோரியும் , இருவழிப்பாதை பதவி உயர்விற்காக காலக்கெடுவை நிர்ணயிக்க கோரியும், விடுமுறை நாளில் பணிபுரிய அனுமதியும் மற்றும் அதற்காக ஊதியமும் வழங்கிடவும், 2500 SC/ST கணக்கீட்டாளருக்கு பதவி உயர்வு வழங்கிடவும், A.T.O. பதவிகள் 150 வழங்காமல் 42 பதவிகள் வழங்கியதிற்கு வருத்தம் தெரிவித்தும். பேசினார்.

அடுத்து CARD BILLING STFF சங்க பொதுச் செயலாளர் திரு.டி.இரத்தினவேலன் தமது உரையில் A.T.O பதவியை Class II to Class I ஆக மாற்றவும், A.T.O-விற்கு உடன் பணியாற்றிட IA, RS வழங்கவும், 2000 கணக்கீட்டாளர் பதவிகளை நிரப்பிடவும், கணக்கீட்டாளர் என இருந்ததை பதவி இறக்கம் செய்து கணக்கீட்டடாளர் 2-ம் நிலை என செய்ததை மீண்டும் கணக்கீட்டாளராக செய்திடவும்வாரியத் தலைவர் குறைபாடுகள் களையப்படும் ஒப்பந்ததில் இல்லாததும் என்றதை பாராட்டி பேசினார்.

அடுத்து Dr.அம்பேத்கார் எம்ப்ளாயிஸ் Union சங்க பொதுச் செயலாளர் திரு. கே.ஜி.சாமி தமது உரையில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர் மறு நியமனம், 08.08.88 அன்று என்பதை மீண்டும் புதியதாக அடையாளம் காண விழைவது, SC/ST Commitee நியமித்தல், துப்புறவு பணியாளர்களை பெயரை Health workers என அழைப்பது, Reservation Implement, Masdur & Assr.Gr.II பதவிகள் மாற்றம் செய்து பழைய முறை பதவிகள் வழங்குவது, 28550 ஒப்பந்த தொழிலாளர் எடுத்ததில் 4000 பேர் மட்டுமே SC/ST அதில் Reservation படி மீதமுள்ளவர்களை எடுக்க வேண்டும் என பேசினார்.

அடுத்து Engineers Union சங்க தலைவர் தமது உரையில் Diploma Holders பதவி உயர்வு தொடர்பாக வரையறை ஏன் மாற்ற வேண்டும் என கேட்பது பற்றி மற்றவர்களது அபிப்பிராயத்தை பற்றி குறிப்பிட்டு எங்களுக்கென்று பதவி உயர்வு எப்படி வழங்க வேண்டும் என ஏற்கனவே உள்ளதை மாற்ற வேண்டாம் எனவும், Re-option மீண்டும் தந்திடவும, பாதிப்பு ஏற்பட்டு பலர் பணத்தை திருப்பி செலுத்தும் நிலை உள்ளதை குறிப்பிட்டும், தொ.நு.உதவியாளர் தர ஊதியம் மாற்றப்பட வேண்டும் எனவும், 2005 -ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளபடி Ratio பின்பற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிறைவாக மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் தமது உரையில் ஒப்பந்தத்தில் அனைவரும் கையொப்பமிட ஒத்துழைப்பு நல்கியதை குறிப்பிட்டு அனைத்து தொழிற் சங்கத்திற்கும் நன்றியும், குறிப்பர்க சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்திற்கு நன்றியும், ஒரு சங்கம் கையொப்பமிட வராததை குறிப்பிட்டு அவர்களது நிலைமை பற்றி குறிப்பிட்டும், எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறப்பான ஒப்பந்தம் என குறிப்பிட்டும், விடுபட்டவைகள் முடியும் என்ற கோரிக்கைகள் வாரிய நலன் மற்றும் நிதிநிலைமை பொருட்டு சாி செய்யப்படும் எனவும், முதல்வரிடம் பேசிய போது நிதி நிலைமை சரியில்லா விட்டாலும் தொழிலாளர்களுக்கு அதை கூறாமல் முடிந்தவரை தரவும் எனவும் கூறியதை குறிப்பிட்டார். எங்களால் எவ்வளவு முடியுமோ அதனை செய்துள்ளதாகவும், வாரிய நிதிநிலைமை மோசமாக இருந்த போது நிதி மறுசீரமைப்பு நடவடிக்கையாக தமிழக அரசு நிதி அளித்து வாரியத்தை சீரமைத்தை குறிப்பிட்டும், மின் உற்பத்தி மின் மிகையாக மாறும் காலத்தில் அனைத்தும் கண்டிப்பாக அதிகமாக வழங்கப்படும் எனவும், இந்த ஒப்பந்தததை கையொப்பமிட உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கு நன்றியும்.ஒத்துழைப்பு நல்கிய தொழிற்சங்க தலைவர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இறுதியாக அனைதது சங்க தலைவர்களும் சுமார் 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் கையொப்பமிட்டனர்.   நிகழ்ச்சி சுமார் 09.00 மணியளவில் நிறைவடைந்தது.

No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle