Friday, February 17, 2012

CIRCULAR

வணக்கம்
நமது சங்கத்தின் சார்பாக வாரியத்துடன் 08.02.2012  நடந்த கூட்டத்தில்
1.அனல் நிலையங்களில் நிரப்படாமல் உள்ள கள பணியாளர்கள் பதவி உயர்வு சம்பந்தமாக வாரிய ஆணை எண் 120 நாள் 20.12.1994 -இல் வட்ட பகிர்மானங்களில் கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது போல இவர்களுக்கும் வழங்கவும் மற்றும்
2.வாரிய ஆணை எண் 212 நாள் 06.08.1991 -இல் வழங்கிய உத்தரவில் களப்பணி உதவியாளராக பணியமர்த்தினால் ( போதிய கல்வித் தகுதி இல்லாதவர் ) அதன் பிறகு வரும் அனைத்து பதவி உயர்வுக்கும் கல்வித் தகுதியை தளர்த்தி முகவர் முதல் நிலை வரை வழங்க ஆவண செய்யவும் என உள்ளதினை சுட்டிக் காட்டியும்
3. மேலும் வாரியத்தில் பணிபுரியும் நபர் தொடர்ந்த வழக்கில் சிறப்பு நிலை முகவர் பதவிக்கும் வாரிய ஆணை எண் 212 நாள் 06.08.1991 பொருந்தும் என உயர்நீதி  மன்றம் உத்தரவில் உள்ளதை தெரிவித்து அதன்படி பகிர்மானத்தில் சிறப்பு நிலை முகவர் பதவி வழங்கியதை எடுத்துக்காட்டியும் கூறப்பட்டது.
4.மேலும் வேலைப்பளு ஒப்பந்தத்தில் B.P.(Ch) NO.222 (SB) dt.21.01.2009 -ன் படி பத்தி 5 -ன்படி Surplus போஸ்ட் இருக்கும் போது அவர்களை மற்ற பகிர்மானங்களில் பணியமர்த்த ஒரு சில சங்கங்கள் ஒத்து கொண்டன.
ஆனால் நமது சங்கம் அவர்களை மேற்கண்ட B.P.(Ch) NO.222 (SB) dt.21.01.2009 -ன் படி பத்தி 5 -ன்படி அந்த வட்டத்தில் மட்டுமே பணிபுரிய வேண்டும் என தெரிவித்தோம்.
5.மேலும் 01.06.1999 அன்று பணியமர்த்திய ஒப்பந்த பணியாளர்கள் நான்கு தெர்மல் நிலையங்களில் பணி நிரந்தரம் செய்யப்படவர்கட்கு இதுகாறும்  பதவி உயர்வு  வழங்காமல் இருப்பதையும், அவர்களின் அவல நிலை குறித்து வெகு விரைவில் ஒப்பந்தம் செய்திட வலியுறித்தியும் சொல்லப்பட்டது.

6.மேலும் வரும் 28.02.2012 அன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தில் நமது சங்க கருத்துகளை கேட்காததினால் வேலை நிறுத்தத்தில் நமது சங்கம் பங்கு பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவன்
கு. செல்வராஜ்
மாநில பொது செயலாளர்  

No comments:

TNPDCL Empolyees & Officers Dept.Exam for August-24 Result Published

TNPDCL Dept.Exam August-24 Results   Subordinate officers Test Result Tech.Officers Result