Friday, February 23, 2018

22.02.18 சங்க தலைவர்கள் ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு குறித்து பேசிய பேச்சின் சாரம்சம்

22.02.2018 ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு நிகழ்ச்சியில் சங்க தலைவர்கள்  நிகழ்த்திய வாழ்த்துரை

01. சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு.V.இராமச்சந்திரன் அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை
01. 12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். 01. வைரவிழா உயர்வு 02. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணியமர்த்தி வாரியமே ஊதியம் வழங்குதல் 03.புதிய பதவிகள் உருவாக்கியதற்கு நன்றி 04.களப்பணி பதவி உயர்வில் சரிசமமான வாய்ப்பு வேறுபாடுகளை களைதல் போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.

02. த.மி.கழக கணக்காயர் களத் தொழிலாளர் சங்க  பொதுச் செயலாளர் திரு.R.சந்திரசேகரன் அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை

1. 12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். 01. இந்த ஒப்பந்தம் அனைத்து மாநில மின்துறைக்கும் உதாரணமாக இருப்பதாகவும் 02.ஒப்பந்தம் தாமதாமாக சங்கங்கள்தான் காரணம் என்பதினை விளக்கியும் 03.வைரவிழா உயர்வினையும் 04. வாரியப் பணியில் 3 பதவி உயர்வுகள் கட்டாயமாக்கப்படுவது குறித்தும் 05. தொ,மு.ச. மற்றும் அண்ணா தொழிற் சங்க நல்லுறவினை பற்றியும் குறித்து தெரிவித்தார்.

03. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.S.சிங்கார.இரத்தினசபாபதி  அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை
1. 12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். 01. இந்த நிகழ்வில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதுவே இந்த சிறப்பான ஒப்பந்தத்தின் சாட்சி எனவும் 02. ஒப்பந்தத்தினை வரவேற்பதாகவும், 03. கலைஞர் அவர்களது ஆட்சியில் பொன்விழாவிற்கு பணமுடிப்பு 1000 வழங்கியதினையும் அது போல வழங்கிடவும்  04. ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு எடுத்து பணம் 500 தினக்கூலியாக வழங்கிடவும் 05. ஏற்கனவே ஏற்பட்ட 11 ஒப்பந்தங்களை பற்றி விளக்கியும் 06. தற்போயதைய மின்துறை அமைச்சர் மாற்று கட்சி சங்கம் என பாகுபாடில்லாமல் பழகுவதினை பற்றி பாராட்டியும் பேசினார்.07. முக்கியமான பல கோரிக்கைகள் பற்றி பேசினார். அவையாவன. பதவி காலத்தில் 3 பதவி உயர்வு மூன்றாவது பதவி உயர்வு 25 காலமாக நிர்ணயித்தல், பெண் கணக்கீட்டாளருக்கு மாற்று பணி, ஒப்பந்த பணிக்கு 480 நாட்கள் முடிந்தால் வாரியப் பணி அளிப்பது, 2000 மி.பா.ஆ, 156 மதிப்பீட்டு அலுவலர், 383 சிறப்பு நிலை ஆக்க முகவர், 2.57 காரணி, வைரவிழா உயர்வு பற்றி குறிப்பிட்டார். 08. சிறை செல்ல பயப்படுவன் அல்ல. பழைய நிகழ்வுகள் சிறைச்சாலையில் 28 நாட்கள் இருந்தது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

04. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் திரு.S.S.சுப்பிரமணியன்  அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை

 1. 12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். 02. ஒப்பந்தத்தில் உள்ள பலவற்றினை பாராட்டியும் 03.புதியதாக வழங்கிய பதவிகளுக்கும்  தேவையில்லா பதவிகள் ஒழிக்கப்பட்டது பற்றியும் பாரட்டினை தெரிவித்தார். 04.சர்வீஸ் வெயிட்டேஜ், பணியில் 3 பதவி உயர்வுகள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம்  பணம் 380 மாற்றம், அலவன்சுகள் பற்றியும், வாகனப்படி வழங்க வலியுறுத்தியும், மருத்துவ பயன்பாட்டிற்கு புதிய ஆப்ஷன் பற்றியும், அந்தந்த ஆண்டுகளில் பதவிகள் கணக்கிட்டு வழங்கிடவும், ஒப்பந்த தொழிலாளர் மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பது குறித்தும், அனைத்து பிரிவிற்கும் மி.பா.ஆ பதவிகளில் 294 விடுபட்டது வழங்கிடவும், மிகைநிலை மி.பா.ஆ மற்றும் மி.நி. வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு வழங்குவது போல உதவி பொறியாளர் (NI) மற்றும் உதவி செயற் பொறியாளருக்கும் (NI) பணப்பயன் வழங்கிடவும் கோரினார். அனல் மற்றும் புனல் வட்ட பதவிகள் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். கடைசியாக இந்த ஒப்பந்தம் ஏற்பட காரணமே ஒருநாள் வேலை நிறுத்தம்தான் காரணம். ஒருநாள் ஊதியத்தினை இழந்தவர்கள் போராடியதின் விளைவாக ஏற்பட்டதாக குறிப்பிட்டார். அதனால் கூட்டத்தில் மிகுதியான சலசலப்பு ஏற்பட்டது. பேச்சு தடைபட்டது. பேச அங்கிருந்தவர்கள் அனுமதிக்க மறுத்து கோஷமிட்டனர். மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்தி பேச விடுமாறு கூறினார். பிறகு அவரது பேச்சு தொடர்ந்து தனது பேச்சினை நிறைவு செய்தார்.

05. மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.T. விஜயரங்கன்   அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை 
1. 12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்தார். 02. ஒப்பந்தத்தில் உள்ள பலவற்றினை பாராட்டியும் 03.புதியதாக  என்னன்ன பதவிகள் உருவாக்கப்பட்டது பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிட்டும் 04. ஒப்பந்தம் ஏற்பட ஒத்துழைத்த அனைத்து தொழிற் சங்க தலைமைக்கும் நன்றியினை தெரிவித்தார். 05. சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்கிட குறிப்பிட்டு  பேசினார் 

06. த.மி.வா.ஜனதா சங்க மாநில பொதுச் செயலாளர் திரு.கு.செல்வராஜ்  அவர்களது வாழ்த்துரை மற்றும் கருத்துரை

மின் துறை  அமைச்சர் அவர்கள்  முக்கியமான கூட்டத்திற்கு தலைமைச் செயலகம் செல்ல இருப்பதால் அடுத்தடுத்துள்ள சங்கத் தலைவர்கள் அமைச்சரின் பேச்சிற்கு பிறகு பேச தெரிவிக்கப்பட்டது.  இந் நிகழ்வில் அமைச்சருக்கு பாரட்டும் முகத்தில் அனைவரும் சால்வை அணிவிக்க சென்றனர்.   ஜனதா சங்க மாநில பொதுச் செயலாளர் அவர்கள்  12 (3) ஒப்பந்தம் நிகழ்த்த ஒத்துழைத்த அனைத்து நிர்வாகத் தரப்பிற்கும், வாரியத் தலைவருக்கும், வந்திருந்த தமிழக அரசு உயரதிகாரிகளுக்கும் மற்றும் மாண்புமிகு. மின்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து சால்வை அணிவித்து  பேச வாய்ப்பில்லாத கால நேரம் கருதி வாரிய மரபான   சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்கிட பேசினார். நேரமின்மை காரணமாக அதன் பிறகு மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் பேச வந்த போது அவருக்கு இந் நிகழ்வில் அமைச்சருக்கு பாரட்டும் முகத்தில் அனைவரும் சால்வை அணிவிக்க சென்றனர். இதனால் பேச்சு தாமதமானது. பிறகு அமைச்சர் அவர்கள் தன்னுடைய பேச்சில் வாரிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உயரதிகாரிகள் அனைவரையும் பாரட்டியும் சங்க தலைவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றியினையும் தெரிவித்தார்.




No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction