Friday, October 23, 2015

சங்கங்களது போனஸ் பேச்சுவார்த்தை(23.10.15) நடத்தியதின் சங்கங்களது கருத்துகளின் சாராம்சம்


இன்று 23.10.15 காலை 11.00 மணியளவில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சங்கத் தலைவர்கள் பேசியதின் சாராம்சம் பின்வருமாறு

01. தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம்
அனைத்து களப்பணியாளர்கள், பகுதிநேர ஊழியர்கள், அலுவலர்கள், தினக்கூலி மற்றுமுள்ளவர்கட்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை தினத்திற்கு முன்கூட்டியே வழங்கிட வேண்டும் என்று பேசினார்
02.தமிழ்நாடு மின்வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கம்
அனைத்து பணியாளர்களுக்கும் 25 சதவீத போனஸ் அலுவலர்களுக்கு கருணைத் தொகை மற்றும் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள போனஸ் உச்சவரம்பை கணக்கிட்டு போனஸ் வழங்கிட வேண்டும் என்று பேசினார்
03. .தமிழ்நாடு மின் கழகத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்
அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்கிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3000 வழங்கிட வேண்டும். தற்போது வழங்கப்படும் போனஸ் உயர்த்தி வழங்கப்பட்டது தி.மு.க.ஆட்சியில் அது தொடர்ந்து வழங்கப்படுகிறது என்பதனை நினைவு கூர்ந்தார்.
04. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு
மின் வாரியத்தின் நட்டம் என்பது பணியாளர்களால் ஏற்பட்டது அல்ல. மற்றும் தணிக்கை குழுவின் அறிக்கையின்படி மின் கொள்முதலுக்காக அதிகம் செலவிடப்படுகிறது.  அது மட்டுமின்றி சட்டசபையில் மாண்புமிகு மின்துறை அமைச்சரின் பேச்சுகளை குறிப்பிட்டும் பேசினார். அனைத்து பணியாளர்களுக்கும் அலுவலர்கட்கும் பகுதிநேர ஊழியருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கட்கும் 30 சதவீத போனஸ் வழங்கிட வேண்டும் என்று பேசினார்
05. மின்சாரப் பிரிவு அண்ணா தொழிற்சங்கம்
வாரியத்தின் இன்றைய வருவாய், ஒவ்வொன்றிற்கும் ஆகும் செலவினம் அனைத்தும் பட்டியலிட்டார். பிறகு 25 சதவீத போனஸ், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3000 அலுவலர்க்கு கருணைத் தொகை வழங்கிட வேண்டும் என்று பேசினர்.
06. தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்
வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிட உடன் நடவடிக்கை எடுத்தல், தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்க்கு செலவிடப்பட்டு வழக்குகள் தோல்வியடைகிறது. ஆகவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அந்த செலவில் வேலை வழங்கிடலாம், இளநிலை உதவியாளர் பதவி உயர்வு படிப்பு சம்பந்தமாக சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஆணை வெளியிட்டு இருக்கலாம், அனைவருக்கும் 25 சதவீத போனஸ் 10 நாட்களுக்கு முன்னதாக வழங்கிடல், மருத்துவ அட்டை மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்படுவதை குறிப்பிட்டு மின் விபத்து ஏற்பட்டால் உடன் சிகிச்சை அளிக்க இயலாத நிலை பற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ அட்டை வழங்கப்படாதது பற்றி, சங்கங்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளிட போன்றவைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
07. தமிழ்நாடு தேசிய மின் தொழிலாளர் சம்மேளனம் (சேவியர் பிரிவு)
அனைவருக்கும் 25 சதவீத போனஸ், ஒப்பந்த தொழிலாளர் பகுதி நேர ஊழியர்கள் மற்றவர்கட்கு 7500 வழங்கிடும் படி பேசினார்
08.. தமிழ்நாடு தேசிய மின் தொழிலாளர் சம்மேளனம் (சுவர்ணராசு பிரிவு)
அனைவருக்கும் 25 சதவீத போனஸ்  மருத்துவ அட்டை எந்த நோயாக இருந்தாலும் அனைத்தும் அதில் வழங்கிட வழிவகை செய்திடக் கோரி பேசினார்.
09. தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்கம்
அனைவருக்கும் 25 சதவீத போனஸ் அலுவலர்களுக்கு 16.67 சதவீத கருணைத் தொகை அல்லது ஏதாவது ஒன்றாவது வழங்கிட கோரியதுடன் அனைத்து போனஸ் பேச்சுவார்த்தைகளிலும் வழங்கிட கருத்துரு மட்டும் செய்யப்படுகிறது. பொங்கல் அன்று தமிழக அரசினர்க்கு வழங்குவது வேண்டாம் தீபாவளிக்கு வழங்கிடவும். மருத்துவ சிகிச்சை பிடித்தம் அதிகம் செய்து அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் பார்த்திட வழிவகை செய்வது, நிலுவையிலுள்ள அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக உடன் பேச்சுவார்த்தை நடத்திட பேசினார்.
10.. தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ்
அனைவருக்கும் 25 சதவீத போனஸ் அலுவலர்கட்கு 16.67 சதவீதம் கருணைத் தொகை ஒப்பந்த தொழிலாளர்கட்கு 5000 என பேசினார். போனஸ் 15 நாட்களுக்கு முன்னர் வழங்கிட கோரினார்.
11. தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம்
மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணியாளர்கட்கு 25 சதவீத போனஸ் இரண்டாம் மற்றும் முதல் நிலையில் உள்ளவர்கட்கு 16.67 சதவீத கருணைத் தொகை வழங்கிடக் கோரினார். மற்றும் உற்பத்தி 70 சதவீதம் மின் வாரியமும் 30 சதவீதம் தனியாரிடமும் பெறப்படுகிறது. தனியாரிடம் பெறப்படும் மின்சாரத்திற்கு அதிக செலவு ஆகிறது. மின் விநியோக கட்டமைப்பு குறைகள் நிவர்த்தி செய்ய களப்பணியாளர்கள் இல்லை. அடிமட்டத்தில் 20000 ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. புதிய ஆட்கள் நியமனம் உடன் நியமித்திட மற்றும் மருத்துவ அட்டை தொடர்பாக புதிய மாற்று வழி முயற்சி எடுத்திட பேசினார்.
12.தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகம்
முதல் மற்றும் இரண்டாம் நிலையில் உள்ளவர்கட்கு கருணைத் தொகை வழங்கிடக் கோரினார்.
13. தமிழ்நாடு மின் வாரிய நிதி மற்றும் கணக்கு அலுவலர் சங்கம்
அனைவருக்கும் 25 சதவீத போனஸ், கணக்குப் பிரிவில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடன் நியமித்திடுதல்.சங்கங்களுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்திடக் கோரினார்.
14. பாரதீய தொழிலாளர் சம்மேளனம்
அனைவருக்கும் 25 சதவீத போனஸ், கணக்கீட்டாய்வாளர் பதவிகள் நிரப்பிடுதல், கணக்கீட்டாளர் புதியதாக பணியமர்த்துதல் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய போனஸ் உச்சவரம்பினை வாரியத்தில் கடைபிடித்திட வழிவகை செய்திடல் Reconsilation செய்ய ஆட்கள் இல்லாமல் பணிஓய்வு பெற்றவர்களை வைத்து செய்வதை தடுத்திடல் மற்றும் கணக்குப் பிரிவில் உள்ளவர்கள் நிர்வாகப் பிரிவில் பணியாற்றுவதை மாற்றி பணிபுரிந்திட கோரினார்.
15. தமிழ்நாடு மின் வாரிய  அட்டை பட்டியல் பணியாளர் சங்கம்
காலிப் பணியிடங்களை உடன் நிரப்பிட அனைவருக்கும் 25 சதவீத போனஸ் அலுவலர்கட்கு 16.67 சதவீத கருணைத் தொகை வழங்கிடக் கோரினார்.
16. தமிழ்நாடு மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாயீஸ் யுனியன்
அனைவருக்கும் 30 சதவீத போனஸ், அலுவலர்கட்கு 5000 அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த பணியாளர்கட்கு 4000 வழங்கும்படி கோரினார். ஒப்பந்த தொழிலாளர்கள் விருப்ப மாறுதல் கேட்பவர்கட்கு வழங்கிட கோரினார்.
17. தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் யுனியன்
அலுவலர்கட்கு கருணைத் தொகை, ஒப்பந்த பணியாளர்கட்கு நிரந்தரப்பணி, 44000 பதவிகள் காலியாக உள்ள நிலையில் அனைவரின் செயல்பாடு அதுமட்டுமின்றி இனிவரும் காலங்களில் ஏற்படும் காலியிடத்தை கணக்கிட்டு புதிய நியமனங்கள் பற்றி பேசினார்.

கடைசியாக கணக்கீட்டாளரிலிருந்து கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு பணிக்காலங்களில் தளர்வு பற்றி சில சங்கங்கள் அளித்துள்ள கடிதத்தின் மீதும்,   வருவாய் மேற்பார்வையாளரிலிருந்து கணக்கீட்டு அலுவலர் பதவி உயர்வில் அவர்களுக்கு தனியறை அளித்திடல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவது இளநிலை உதவியாளர் பணியிடங்கள் அதிகமாக காலியிடங்கள் உள்ளதை படிப்பு சம்பந்தமான Relaxation தொடர்பாக ஜனதா சங்கம் மற்றும் கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர் சங்கம் பேசியது அதன் மீது உடன் நடவடிக்கை எடுக்க கோரியது. மேற்கண்டவைகள் தொடர்பாக POLICY முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக இயக்குநர் நிதி அவர்கள் தெரிவித்து உடன் அனைத்தும் நிறைவேற்றிட பேசி முடிவெடுப்பதாகவும் கூறி  விடைபெற்றார்.

No comments:

TNPDCL Empolyees & Officers Dept.Exam for August-24 Result Published

TNPDCL Dept.Exam August-24 Results   Subordinate officers Test Result Tech.Officers Result