தினகரன் 10.08.2015 (திருச்சி பதிப்பு) நாளிதழில் ஜனதா சங்க மாநில பொதுக்குழு பற்றி விவரங்கள்
2014 மின்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுப்பையர், மதுரை மண்டல தலைவர் சசாங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆண்டறிக்கையையும், மாநில ெபாருளாளர் ரவி ஆண்டு வரவு செலவு அறிக்கையையும் வாசித்தார்.
கூட்டத்தில் கடந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வசூல் மையத்தில் உள்ள கணினி, பிரிண்டர் போன்றவற்றை புதிதாக மாற்றி தர வேண்டும், பணிக் காலத்தில் 3 பதவி உயர்வுகள் வழங்கிட வாாியம் தகுந்த உத்தரவு பிறப்பித்திட வேண்டும், மின்விபத்தில் சிக்குண்டு இறந்து போகும் வாாிய ஊழியரின் வாரிசுக்கு வேலையளிக்கும் போது அவர்களின் கல்வி தகுதியினை தளர்த்தி வேலை வழங்கிடுமாறு கோாியும், 2014 மின்திருத்த மசோதாவினால் ஏற்படும் பின்விளைவுகளை கவனத்தில் கொண்டு மத்திய அரசு மின் மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து குடும்ப நலநிதி பொருளாளர் இளங்கோவன் குடும்பநல நிதி வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஜவஹர்லால், மாநில துணை தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாலைமலர் 09.08.2015 நாளிட்ட பதிப்பின் தகவல்
No comments:
Post a Comment