Friday, April 17, 2015

ஜனதா சங்கம் நடத்தி வைத்த திருமணம்

தமிழ்நாடு மின் வாாிய ஜனதா தொழிலாளா் சங்கத்தின் திருவள்ளுா் கோட்ட செயற் குழு உறுப்பினா் திரு.S.நரேஷ் (களப்பணி உதவியாளா் ஊத்துக் கோட்டை பிாிவு (வாாிசு வேலையில் பணியில் சோ்ந்தவா்) மற்றும் செல்வி.P.மோனிஷா அவா்களின் திருமணம் 15.04.2015 அன்று மாலை 06.00 மணிமுதல் 07.30 மணிவரை ஆந்திரப் பிரதேசம் புத்துாா் ரோடு, நாகலாபுரம் R.M.R.திருமண மண்டபத்தில் கிராமத்தில் நடைபெற்றது. அவ்வமயம் திருமண விழாவில் நமது சங்க மாநிலப்பொருளாளா் திரு.கா.இரவி, மாநில இணைச் செயலாளா் திரு.இரா.வரதராஜன், காஞ்சி வட்டச் செயலாளா் திரு.வீ.ஜனாா்த்தனம், காஞ்சி வட்ட துணைத் தலைவா் திரு.கா.மகாலிங்கம் மற்றும் திருவள்ளுா் கோட்ட பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். மேலும் மணமக்கள் இருவருக்கும் தாய் தந்தையா் இல்லாததால் காஞ்சிபுரம் வட்டம்  மற்றும் திருவள்ளுா் கோட்ட  ஜனதா சங்க பொறுப்பாளா்கள் மற்றும் ஊத்துக்கோட்டை இளநிலை பொறியாளா் திரு.கோபால் மற்றும் பிாிவு பணியாளா்கள் அனைவரும் அவரவா் அளித்த அன்பளிப்பில் மேற்படி திருமணம் நடைபெற உதவினா். அனைவருக்கும் ஜனதா சங்கம் நன்றியை தொிவித்துக் கொள்கிறது.









No comments: