Thursday, November 14, 2013

14.11.2013 அன்று வாரியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாராம்சம்

அன்பார்ந்த நண்பர்களே

இன்று காலை முதல் நடைபெற்ற வேலைப்பளு தொடர்பான பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வு தொடர்பான வாரியத்தின் வரைவு  அளிக்கப்பட்டது.

அதில் 01.12.2011 அன்று பெறும் அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்வு என குறிப்பிட்டிருந்தது. பிறகு அதனுடன் தர ஊதியம் Grade Pay இரண்டும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டது. 5 சதவீதம் என்பதினை அனைத்து சங்கங்களும்  மறுப்பு தெரிவித்தனர்.


 மேலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. மதிய உணவு இடைவேளை இல்லாமல் 04.30 மணி வரை நடைபெற்றது. வேலைப்பளு தொடர்பாக அனைத்து சங்கங்களும் தத்தமது கருத்துகளை தெரிவித்தனர்.

தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பசியினால் வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோயில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

ஊதிய உயர்வு பற்றி ஜனதா சங்க பொ.செ பேசும் போது குறைந்தபட்சம் ரூ.500 என்பதினை ரூ.1000 என வழங்க கோரினார். மற்றும் வேலைப்பளுவில் கடந்த ஒப்பந்தததில் ஒவ்வொரு வருடமும் உருவாகும் பதவிகள் பற்றி ஆலோசனை செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதுவரை அது மாதிரி எதுவும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

வேலைப்பளுவில் பிரிவு அலுவலகங்களில் ஒரு சிறப்பு நிலை ஆக்க முகவர் பதவி உயர்வு தொடர்பாக அனைத்து சங்கங்கத்தினரும் பேசினர்.

ஊதிய உயர்வு சதவீதம் உயர வாய்ப்புண்டு என பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களின் கருத்தாக இருந்தது. 

இன்னும் பல செய்திகள் பிறகு.

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்.

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction