திருப்பூர் : மின் சிக்கனத்தை வலியுறுத்தி, ஆறு லட்சம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணியை ஜனதா தொழிற்சங்கம் துவக்கியுள்ளது.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், ஆண்டுதோறும் டிச., 14 முதல் 20 வரை, மின் சிக்கன வார விழா கொண்டாடப்படுகிறது. மின் உற்பத்திக்கு ஏற்படும் செலவு, வீணாகும் நிலக்கரி மற்றும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மின்வாரிய ஜனதா தொழிற்சங்கம் சார்பில், மின் சிக்கனத்தை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆறு லட்சம் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பணியை துவக்கியுள்ளனர். அதில், "உங்களுடைய வீட்டு மின் இணைப்பு கட்டணம் எவ்வளவு தெரியுமா? 0-100 யூனிட் வரை, யூனிட்டுக்கு ஒரு ரூபாய்; 0-200க்கு, ரூ.1.50; 201-500க்கு யூனிட்டுக்கு, மூன்று ரூபாய்; 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால், 200 யூனிட் வரை, 3 ரூபாய், 201- 500 வரை, 4 ரூபாய், 500க்கு மேல் பயன்படுத்தினால், யூனிட்டுக்கு 5.75 ரூபாய் கட்டணம் செலுத்துகிறீர்கள். மின் சிக்கனம் செய்து, பணத்தை சேமியுங்கள்,' என, குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனதா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் கென்னடி கூறுகையில், ""யூனிட்டுக்கு ஏற்ப மின்சார கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முழுமையாக தெரிந்து வைத்திருந்தால், பயன்படுத்தும் மின்சார அளவை தானாக குறைத்துக் கொள்வர். மொத்தம் ஆறு லட்சம் எஸ்.எம்.எஸ்., அனுப்ப திட்டமிட்டுள்ளோம். எஸ்.எம்.எஸ்., வந்தவர்கள், மற்றவர்களுக்கு அனுப்பினால், மின் பயன்பாட்டில் மக்கள் கவனம் செலுத்த வாய்ப்பும், பல லட்சம் பேருக்கு தகவலும் சென்றடையும்,'' என்றார்
No comments:
Post a Comment