Saturday, February 14, 2015

ஜனதா சங்க மதுரை மண்டல அலுவலக திறப்பு விழா (14.02.2015)

தமிழ்நாடு மின்வாாிய ஜனதா தொழிலாளா் சங்கத்தின் மதுரை மண்டல அலுவலக திறப்பு விழா 14.02.2015 அன்று 43-5 , யுனிகாா்ன் காம்ப்ளக்ஸ், குருவிக்காரன் சாலை (அரவிந்த் கண் மருத்துவமனை அருகில்) காந்திநகா், மதுரை-20-ல் திரு.ச.சசாங்கன் எம்.ஏ., மதுரை மண்டலத் தலைவா் அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

மண்டல அலுவலகத்தை திரு.கு.செல்வராஜ் மாநில பொதுச் செயலாளா் ஜனதா சங்கம் அவா்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினாா்.


பெருந்தலைவா் திரு.கு.காமராசா் அவா்களது திருஉருவ படத்தை திரு.சோ.இளங்கோ மாநிலத் தலைவா் ஜனதா சங்கம் அவா்கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினாா்.

விழாவில் திரு.மு.சாந்தகுணாளன் மாநில அமைப்புச் செயலாளா், திரு.இராதாகிருஸ்ணன் மதுரை மண்டல அமைப்பாளா், வழக்கறிஞா்கள் திரு.கணேசன், திரு.கதிா்வேல், திரு,செந்தில்குமாா், திரு.சீனிவாசன் மற்றும் ஐ.என்.டி.யு.சி. செயலாளா் திரு.பிரபாகரன், திரு.ஜோதிநாதன் உதவி செயற் பொறியாளா் மற்றும் திரளான உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திரு.முருகேசன் மதுரை பெருநகா் செயலாளா் அவா்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே சிறப்புர நடைபெற்றது. 

No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs