Thursday, May 20, 2021

05/2021 மாத மின் கட்டணத்திற்கு PMC வழங்கப்பட்டதில், மின் நுகர்வோருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க மின் வாரியம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது self reading மூலம் கட்டணத்தை திருத்திக்கொள்ளலாம்

 






லாக்டவுன் காரணமாக 05-2021 மாத ரீடிங் எடுக்காததால்  PMC கடந்த வருட மே மாத பில் போடப்பட்டது கடந்த ஆண்டைவிட தற்போது உபயோகம் குறைவாக பயண்படுத்தினால் self Reading மூலம்  கட்டணத்தை மாற்றிக்கொள்ளலாம் 



05/2021 மாத மின் கட்டணத்திற்கு PMC வழங்கப்பட்டதில், மின் நுகர்வோருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க மின் வாரியம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.


*05/2021 மாத PMC கணக்கீட்டை ரத்து செய்து மின் நுகர்வோர் கொடுக்க கூடிய கணக்கீட்டை (Self Assessment Reading ) பதிவு செய்ய வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.* 


*மேலும் ரூபாய் 30000/- வரை உள்ள கணக்கீட்டை ரத்து செய்ய உதவி மின் பொறியாளர் / உதவி கணக்கு அலுவலர் / உப கோட்ட மதிப்பீட்டு அலுவலருக்கு 31.05.2021 வரை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.*


*மின் நுகர்வோர் தங்களது மின் கணக்கீட்டை SMS,Whats up மற்றும் email மூலமாகவும் பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பலாம்.* 


*அவ்வாறு அனுப்பப்படும் தகவல்களை (Self Assessment Reading ) சேகரித்து வைத்துக் கொண்டு பதிவேட்டில் பதிவு செய்து மின் நுகர்வோரின் PMC கணக்கீட்டை ரத்து செய்து, மின் நுகர்வோரின் கணக்கீட்டை கணணியல் பதிவு செய்து, மின் கட்டணத்தை மின் நுகர்வோருக்கு அதே வழியிலேயே (SMS, What's up, Mail ) தெரிவிக்க வேண்டும்.* 



எனவே மின் நுகர்வோர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டால் கனிவுடன் பதிலளித்து அவர்களது சந்தேகங்களுக்கு தீர்வு கூறி வாரிய வருவாயை பெருக்க வழிவகை செய்யுங்கள்.

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction