அன்பார்ந்த நண்பர்களே
11.10.2018 அன்று வாரியத்துடன் நடைபெற்ற போனஸ் பேச்சுவார்த்தையில்த.மி.வா.ஜனதா தொ.சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் திரு.கு.செல்வராஜ் துணைப் பொதுச் செயலாளர் திரு.சு.பாரி மாநிலப் பொருளாளர் திரு. கா.இரவி மாநில அமைப்புச் செயலாளர் திரு.மு.சாந்தகுணாளன் மாநில இணைச் செயலாளர்கள் திரு.ஆர்.மணிவண்ணன் மற்றும் திரு.இரா.வரதராஜன் மற்றும் திரு.ஆர்.பழனி தலைமைய செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
01. போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அனைவருக்கும் 25 சதவீதம் வழங்க வேண்டும். பகுதிநேர ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் வழங்கிட வேண்டும். போனஸ் இல்லாத அலுவலர்களுக்கு ரு.10000 வழங்கிட வேண்டும் எனவும் தீபாவளி பண்டிக்கை 10 நாட்கள் முன்னதாக வழங்கப்பட வேண்டுமெனவும்
02.காலிப்பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக வாரியத் தலைவர் மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்தும் பேசியும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணிச் சுமை காரணமாக பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தற்சமயம் 52 துணை மின் நிலையங்கள் துவங்கப்பட்டு அதற்கு தகுந்த பணியாளர்கள் இல்லாமல் அதற்கான பதவிற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதும் மற்றும் அந்த இடங்களில் களப்பணி பணியாளர்களை தற்காலிக இடமாற்றத்தில் கீழ்நிலை ஊழியர்களை பயன்படுத்துவதும் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களை பணியமர்த்தி செய்வதினை களைந்திட வேண்டும் எனவும்
03.மேற்கண்ட பதவிகள் அனுமதிக்கப்பட்டால் ஊர்மாற்றல் கோரியுள்ளவர்கள் அங்கு பணியமர்த்தப்படும் நிலை ஏற்பட வழி ஏற்படும் எனவும்
04. அனல்மின் நிலையங்களில் வேதியியலர் மற்றும் டெஸ்டர் கெமிக்கல் போன்ற பணியிடங்கள் 150 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதினை நிரப்பிட வேண்டும் எனவும் அவர்கள் பணிச்சுமை குறித்தும் பேசப்பபட்டது.
05. ஒப்பந்தம் ஏற்பட்டு இவ்வளவு மாதங்களாகியும் நிரப்பப்படாமல் உள்ள 2000 மின்பாதை ஆய்வாளர் 383 சிறப்பு நிலை ஆக்க முகவர் பதவியிடங்கள் நிரப்பப்படாதது குறித்தும் அதுபோன்று கணக்கீட்டாளர் நிலை 2 லிருந்து கணக்கீட்டாளராக மாற்றம் செய்ததினை சில வட்டங்களில் செயல்படுத்தாமை மற்றும் வாரிசு வேலை வருபவர்களுக்கு கணக்கீட்டாளர் பதவி வழங்கி ஏற்கனவே சீனியராக உள்ள கணக்கீட்டாளர்களுகட்கு ஏற்படும் பணபயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைக்கபட்டு இவைகளை களைய உடன் நடவடிக்கை எடுக்கவும் பேசப்பட்டது.
06. பணிச்சுமை காரணமாக பணியாளர்களும் அலுவலர்கள் ஆகியோருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஏற்படும் பதவியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மின் இணைப்புகள் மின்மாற்றிகள் கூடிக் கொண்டு போவதினை கருத்தில் கொண்டு பதவியிடங்களை கோர வேண்டும். தற்போதும் 3 ஆண்டுகளாக உள்ள காலியிடங்கள் கோரப்பட்டுள்ளது. மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு அதற்கான புதிய காலியிடங்கள் கணக்கிடப்பட்டு அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என பேசப்பட்டது.
07. ஓப்பந்த தொழிலாளர் அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்தல் பற்றியும், வாரியம் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்கிறது. ஆனால் தினம் தினம் மின்விபத்தில் பலியாகிறவர்கள் யார்? ஆகவே அனைத்தும் தெரிந்தும் வாரியம் இப்படி நடந்து கொள்வது நியாயம்தானா? எனவும் தொழிலாளர் அலுவலர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் காலம் கடத்துதல் பற்றி குறிப்பிட்டு பேசப்பட்டது.
08. தற்போது ஊர் மாறுதல் ஆன்லைனில் பல தவறுகள் நடைபெறுதல் குறித்தும் அதனை களைய பேசப்பட்டது.
09. சங்கங்களுடன் காலமுறை பேச்சுவார்த்தை நடத்தினால் இன்று அனைவரும் போனஸ் குறித்து மட்டும் பேசியிருப்போம். ஆகவே அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த பேசியதில் இனிவரும் காலங்களில் நடைபெற உத்திரவாதம் தரப்பட்டது.
10. போனஸ் 8.33% என்பது ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது. எமர்ஜென்சியின் போது 4% என குறைக்கப்பட்டது. பிறகு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது குறித்தும் பேசப்பட்டது.
No comments:
Post a Comment