அன்பார்ந்த நண்பர்களே,
இன்று 25.10.2017 ஜனதா சங்கத்தின் சார்பில் வாரியத்துடன் ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு தொடர்பாக பேசப்பட்டது. அதில் ஜனதா சங்கத்தின் சார்பில் கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. கருத்துரு மற்றும் கருத்துருவில் இல்லாதது பற்றியும் பேசப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு.
01. வாரியத் தலைவர் உத்திரவின்படி கைப்பேசியில் நிழற்படம், காணொலி எடுக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் வாரியத்தின் சார்பில் நிழற்படம் எடுத்து தருவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
02. காலியாக உள்ள ஆரம்ப நிலை பதவிகள் நிரப்பிட வாரியம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
03.களப்பணியில் நிகழ்ந்திடும் விபத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அதிகம் செலவாகிறது மற்றும் பட்டியலில் அது வரவில்லையாதலால் அதிகம் செலவாவதால் அதற்கென முன்பு வழங்கப்பட்டது போல சிறப்பு (Spl Tem. Adv) அந்தந்த வட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுமதி அளித்து பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உடன் உதவிட கோரப்பட்டதில் அது தொடர்பாக வாரியத் தலைவர் மற்றும் குழுவிடம் நல்ல முடிவு ஏற்படுத்தி தர கோரியதை ஏற்றுக் கொண்டனர். அது பற்றி விரைவில் முடிவெடுப்பதாக தெரிவித்தனர்.
04. இ.நி.பொ. 2-ம் நிலை பட்டயமல்லாதோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக பேசப்பட்டது. முதன் முதலில் ஜனதா சங்கம் இந்த கோரிக்கை பற்றி தொடர்ந்து கடிதங்கள் மற்றும் பேச்சுவார்த்தையில் பேசியதினை தெரிவித்து மற்றும் தற்போது பெரும்பாலான சங்கங்கள் இந்த கோரிக்கை பற்றி பேசியுள்ளதாகவும் கருத்துரு அளித்துள்ளதினையும் குறிப்பிட்டு பேசியதில் நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் பொருத்திருந்து பார்க்கலாம்.
05.அது போன்று மற்றுமுள்ள தொ.நு.உ, உதவி பொறியாளர், செவிலியர் மற்றும் நிர்வாக பிரிவு அனல் மின் நிலையங்களில் சில பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
06. கணக்கீட்டாளர் 2-ம் நிலை கணக்கீட்டாளர் இரண்டும் இணைக்கப்பட்டு கணக்கீட்டாளர் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் பேசப்பட்டது. சாதகமானது நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். பொருத்திருந்து பார்க்கலாம்.
07. களப்பணியாளர் பதவி உயர்வில் தேக்க நிலை பற்றியதில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகுதான் பதவி உயர்வு வழங்கிட இயலும் என தெரிவித்தனர். நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்கில் அதன் தீர்ப்பு வரும் வரை தீர்ப்பிற்கு கட்டுப்படுகிறோம் என பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு அதில் நீதிமன்ற பதிவெண்ணை குறிப்பிட்டு பதவி வழங்கப்பட்டதினை சொல்லியதில் அவர்கள் இதில் ஸ்டே உள்ளதாகவும் அதன் தீர்ப்பு நகல் கிடைக்கும்வரை அது ஸ்டேதான் எனவே ஸ்டே உள்ள இந்த வழக்கில் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையை தெரிவித்தனர்.
08. மாவட்ட தொழிலாளர் ஆய்வாளரால் தீர்ப்பு மற்றும் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப் பெற்ற ஒப்பந்த தொழிலாளர்களின் விவரங்கள் 13.01.17 வழங்கிட கோரப்பட்டது மற்றும் பிப்ரவரி-2017 நினைவு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் மீது வாரியம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அப்படி எடுத்திருந்தால் ஆரம்ப நிலை பதவிகள் நிரப்பி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி ஒப்பந்த பணியாளர் இல்லை என்ற வாரியத்தின் நிலையை தவிர்த்து அவர்களை நிரந்தரப்படுத்திட பேசியதில் அவர்கள் இல்லாமல் வாரியம் இயங்கவில்லை என அவர்களுக்கு புரிகிறது. இதிலும் குழு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
09. கடந்த ஒப்பந்தப்படி பணியிடங்கள் மின் இணைப்பின் அடிப்படையில் நிரப்பப்படவில்லை என்பதனை தெரிவித்ததில் அதன்படி பதவிகள் ஒப்புதல் வழங்கிட உள்ளதாகவும் அதுமட்டுமின்றி ஒப்பந்தத்தில் அது இடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அதனை தெரிவித்திட கோரியதில் இது தொடர்பாக நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கையுடன் உள்ளோம். பொருத்திருந்து பார்க்கலாம்.
10. அப்பழுக்கில்லா பணிபுரிந்தோர்க்கு 25 வருடங்கள் ரூ.2000 வழங்கப்படுவதினை ஒரு ஆண்டு ஊதிய உயர்வாக வழங்கிட கோரப்பட்டது.
11. உள்முகத் தேர்வில் இ.நி.உ நிர்வாகம் மற்றும் கணக்கு ஒருமுறை 10-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களை தேர்ந்தெடுக்க கோரப்பட்டதில் தற்போது வழக்கு நிலுவையில் இருப்பது தெரிவித்து விரைவில் நிவர்த்தி செய்திட உள்ளதாக தெரிவித்தனர். என்ன முடிவில் உள்ளார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
12. காலமான மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சி.பி.எஸ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை பற்றி குறிப்பிட்டதில் வாரிய ஆணைப்படி நடைமுறைப்படுத்தப்பட வில்லை என நினைவு படுத்தப்பட்டது.
12. காலமான மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சி.பி.எஸ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை பற்றி குறிப்பிட்டதில் வாரிய ஆணைப்படி நடைமுறைப்படுத்தப்பட வில்லை என நினைவு படுத்தப்பட்டது.
13.அப்பரண்டிஸ் பற்றி பேசியதில் தற்போது ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு தற்போது எடுக்கப்படுவதாக தெரிவித்தனர். மற்றும் டிப்ளாமா பி.ஈ பற்றி பேசப்பட்டது. ஏற்கனவே வழக்கு நேரடி வேலைவாய்ப்பில் இருப்பதால் தாமதமாகும் என நினைக்கிறோம்.
14.R.P.A.D.R.P -ல் Go Live உள்ள 110 பிரிவு அலுவலகங்களில் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பேசப்பட்டது. அதனை வாரியம் உணர்ந்து அதில் பழைபடி உள்ளது போல் செய்ய பரிசோதனையில் ஒரு பிரிவில் தற்போது செயல்படுவதாகவும் அதனை தொடர்ந்து மற்ற அந்த பாதிக்கப்பட்ட பிரிவில் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
15. அது போன்று அதற்கு பிரிவில் கணினி கையாளும் அனைவருக்கும் வாரிய தரப்பில் பயிற்சி அளித்திட கோரியுள்ளோம். மேலும் கருத்துரு கோரிக்கைகள் பற்றியும் பேசப்பட்டது
No comments:
Post a Comment