Monday, May 29, 2017

ஜனதா சங்கம் 29.05.17 ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு தொடர்பான சாராம்சம் மற்றும் புகைப்படம்

29.05.2017 ஜனதா சங்கம் வாரியத்துடன் நடைபெற்ற வேலைப்பளு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பாக கடிதம், ஆலோசனைகள் மற்றும் நிகழ்வின் புகைப்படங்கள் 




இது தவிர 01. காலிப்பணியிட நிலவரம் தற்போதைய நிலையில் எவ்வளவு உள்ளது? 02. களப்பணி  இருவழிப்பாதை பதவி உயர்வில் வீண் காலதாமதம் ஏற்படுவதில் வாரியம் தடையாணை விலக்கிட நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார்கள். 03. சிறப்பு நிலை ஆக்க முகவர் ஊரகப் பிரிவிற்கும் வழங்கிடலாம் எனவும் 04. கணக்கீட்டு பணிக்கான Hand Devicer பழையவற்றிற்கு பதில் புதியது வாங்கிட உள்ளதாகவும் தெரிய வருகிறது. 05. கடைசியாக வழங்கப்பட்ட மஸ்தூரில் உள்ளவர்களை கல்வித் தகுதி உள்ளவர்களை தகுதிக்கு ஏற்றாற் போல் கணக்கீட்டாளர், மீட்டர் கம் ரீடர், போன்று பதவிகள் வழங்கப்படவில்லை. அதில் கல்வித்தகுதி உள்ளவர்கள் உள்முகத் தேர்வின் வாயிலாக கேட்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 06. அது போன்று இளநிலை உதவியாளர் நிர்வாகம் மற்றும் கணக்கு பதவிகளில் பழைய முறையே பின்பற்றப்பற்றி உள்முகத் தேர்வின் வாயிலாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  அதனால் ஏற்பட்டுள்ள நீதிமன்ற வழக்கிற்கு வாரியம்தான் காரணம் எனவே வழக்கினை வாரியம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டியது வாரியத்தின் கையில்தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 07. கணக்கீட்டாளர் 2-ம் நிலை மற்றும் கணக்கீட்டாளர் ஆகிய இரு பதவிகளும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 08.SNLI-க்கு வாரிய உத்திரவு எண் 02 நாள் 01.02.2017-ல் ஊதிய  முரண்பாடு வழங்கப்படாது என்பதினை இரத்து செய்து வழங்கிட வலியுறுத்தப்பட்டது. 09. உதய் திட்டம் தொடர்பாக வாரியம் சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்திட வலியுறுத்தப்பட்டது மற்றும் பல விஷயங்கள் தொடர்பாக விளக்கி பேசப்பட்டது.  10. ஊதிய ஒப்பந்தம் வரைவுகள் தமிழக அரசின் 7வது ஊதியக்குழுவின் ஆணை வெளியிட்ட பின் வழங்கப்படும் என தெரிய வருகிறது






No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle