Monday, March 6, 2017

06.03.17 ஜனதா சங்கம் ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு தொடர்பான விவாதத்தின் சாராம்சம்

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு தொடர்பாக வாரியத்துடன் 06.03.2017 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சங்கள்

01. ஊதிய உயர்வு இடைக்கால நிவாரணமாக 2000 மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 1000 வழங்கிடவும் 02. ஏற்கனவே 6வது ஊதியக் குழுவில் சில பதவிகளின் ஊதிய கிரேடு பே மாற்றம் செய்யப்படாமல் வாரியத்தில் செய்யப்படாமல் உள்ளது. (உதாரணம் : தொழில்நுட்ப உதவியாளர்) அதனை களைந்து விட்டு பிறகு
03. மாநில அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி வாரியத்திலும் வழங்கிடவும்                                                                                                                                        04. செலக்‌ஷன் கிரேடு 9 ஆண்டுகள் பிறகு 20 ஆண்டுகள் ஸ்பெஷல் கிரேடு என உள்ளதினை 18 ஆண்டுகளாக மாற்றிடவும்                                                                           05. கணக்கீட்டாய்வாளர் பதவி உயர்வில் காலியாக உள்ள 2700-க்கும் அதிகமான இடங்களுக்கு 1043 பேருக்காக மட்டும் பதவி உயர்வு வழங்கிட கேட்கப்பட்டுள்ளதினை மீதமுள்ள காலியிடங்களுக்கும் கேட்டு நிரப்பிட சிறப்பு கவனம் மேற்கொள்ளும் படியும்                                                                                   06. சர்வர் பிரச்சனைகளை உடன் களைந்திட கேட்டதில் அது தொடர்பாக உடன் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் மற்றும் பதிவுகள் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை அதற்காக பதிய கால அவகாசம் கேட்டால் கால அவகாசம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
 07. கணக்கீட்டாளர் 2-ம் நிலை மற்றும் கணக்கீட்டாளர் பதவியில் பணிபுரிபவர்கள் இரண்டு பணிகளையும் 9 ஆண்டுகாலம் பணி முடித்தவர்களுக்கு செலக்‌ஷன் கிரேடு பணப்பயன் வழங்கிடவும் 
 08. வாரியத்தில் பணியில் கணக்கீட்டாளராக சேர்ந்து 3 பதவி உயர்வுகள் வராத மொத்த வாரியப்பணி காலம் 27 ஆண்டுகள் முடித்தவர்கட்கு கணக்கீட்டு அலுவலர் பதவி உயர்வு வழங்கிடவும் 
 09. 4-வது சனிக்கிழமை கணக்கீட்டு பணியில் உள்ளவர்கட்கு விடுமுறை வழங்கிடவும் 
 10. தொழிலாளர் ஆய்வாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திடவும் 
 11. வாரியத்தில் நேரடி நியமனம் தாமதமாவதினை களைந்திடவும் கேட்கப்பட்டத்தில் வாரிய தரப்பில் சிலர் நீதிமன்றம் சென்று தடை வாங்கப்படுவதால் தாமதமானது என்றும் நீதிமன்றம் தடைகள் இல்லாமல் இருந்தால் இரு தடவைகள் காலிப்பணியிடங்கள் வாரியத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எனவும் பதிலளித்தனர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
 12. வாரியத்தில் விநியோகிக்கப்படும் சில மின்அளவிகள் தரமானதாக இல்லை மற்றும் அதனால் வாரிய இழப்பு அதிகமாகிறது அதனை களைய கேட்கப்பட்டதில் இது தொடர்பாக தனியாக பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 13. கணினி பயிற்சி வணிக உதவியாளர் வணிக ஆய்வாளர் கணக்கீட்டாளர் கணக்கீட்டாய்வாளர் மற்றும் கணினி சார்ந்த அனைவருக்கும் பயிற்றிட வாரியம் அனுமதித்து சிறப்பு வகுப்புகள் நடத்திடவும்
 14. வெயிட்டேஜ் ஏற்கனவே வழங்கப்பட்டது போன்று வழங்கிடவும் 
 15. வார்தா புயல் பணி செய்தவர்களுக்கு பல வட்டங்களில் மும்மடங்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றதற்கு ஏற்கனவே பணமாக அளித்ததற்கு பல வட்டங்களில் இருந்து செலவின தொகை செலவிடப்பட்டு அதற்கான கணக்குகள் வரவில்லை எனவும் அது உடன் அளித்தவுடன் வழங்கிடுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 16. இளநிலை பொறியாளர் 2-ம் நிலை சீனியாரிட்டி பட்டியல் தாமதமாவது தொடர்பாகவும் .
 17. அதே போன்று சிறப்பு நிலை ஆக்க முகவர் இளநிலை பொறியாளர் 2-ம் நிலை பட்டயமல்லாதோர் ஊதிய முரண்பாடு தொடர்பாக முறையிட்டு வரும் நமது கோரிக்கையினை உள்ளதினை களைந்திடக் கோரி வற்புறுத்தியும்
 18. களப்பணியில் சில பதவி உயர்வில் விலக்கு மற்றும் சில பதவிகளுக்கு பதவி உயர்வில் தடை இதனை உடனுக்குடன் களைந்திடவும் 
19. தொ.நு.உதவியாரிலிருந்து இளநிலை பொறியாளர் 2-ம் நிலை பதவி உயர்வு சம்பந்தமாகவும்
20. உள்முகத் தேர்வில் உதவி பொறியாளர் பணியிடங்கள் நிரப்பிடவும்
21. இளநிலை உதவியாளர் கணக்கு நிர்வாகம் உள்முகத் தேர்வில் நிரப்பிட வாரியம் முயற்சிக்க வேண்டும் எனவும் தமிழக அரசில் இளநிலை உதவியாளர் மற்றும் அதன் சார்ந்த பதவிகளுக்கு 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் வழங்கப்படுகிறது.  ஆகவே வாரியத்தின் தற்போதைய விதிகள் அதற்கு பாதகமாக உள்ளது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் அதனை களைய ஒரு தடவை சிறப்பு நிகழ்வாக உள்முகத் தேர்விற்கு விதிவிலக்கு அளித்தால் வழக்கு முடியும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. 
22.உள்முகத் தேர்வில் பண்டக காப்பாளர் 2-ம் நிலை காலதாமதம் ஏற்படுகிறது அதனை உடன் நிரப்பிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
23. காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் உள்முகத் தேர்வில் நிரப்பிட்ட பின்னர் நேரடி நியமனம் வழியாக  நிரப்பிடவும் 
24. காலியாக பல பதவிகள் உள்ளதினால் வேலைப்பளு அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஊதியப்பளு பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட்ட பின்னர் அடுத்த வேலைப்பளுவில் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. 
மற்றும்  பல முக்கிய விஷயங்கள் தொடர்பாகவும் விடுபட்ட கோரிக்கைகள் அடுத்த கட்ட வாரியம் அளிக்கும் கருத்துருவினை தொடர்ந்து  தெரிவிப்பதாகவும் விவாதிக்கப்பட்டது.

No comments: