வாரிய வரலாற்றில் ஒரு புதிய முயற்சி
வித்திட தங்களது ஆசி மற்றும் ஆலோசனைக்காக
இன்று மாலை (22.08.2014) 05.15 மணியளவில் புதிதாக திறக்கப்பட்ட காஞ்சிபுரம் த.மி.வா.ஜனதா தொழிற் சங்க கட்டிடத்தில் சங்க வேறுபாடு இல்லாமல் புதியதாக பதவி உயர்வு பெற்ற வணிக உதவியாளர்களுக்கு (காஞ்சிபுரம் வடக்கு கோட்ட பிரிவு அலுவகத்தில் பணிபுரிபவர்களுக்கு) வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் 11 வணிக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மற்ற கோட்டங்களுக்கு அடுத்தடுத்து நடத்த உள்ளோம்.
அடுத்து சஙக வேறுபாடு இல்லாமல் புதியதாக பணியில் சேர்ந்த களப்பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கணக்கீட்டாளர் 2-ம் நிலை, உதவி பொறியாளர்கள் ஆகியோருக்கும் வகுப்புகள் நடைபெற உத்தேசித்துள்ளோம்.
வாரியம் நடத்தும் பாட திட்டங்கள் மட்டும் இல்லாமல் அந்தந்த பதவிகளில் உள்ள நிபுணத்துவம் பெற்ற எமது சங்க பொறுப்பாளர்கள் அதுமட்டுமின்றி வெளியில் உள்ள நிபுணத்துவம் மிக்கவர்களாலும் மற்றும் முழு உடல் பரிசோதனை (குறைந்த செலவில்) யோகா (இலவசமாக) ஆகிய வகுப்புகளும் நடத்த உத்தேசித்துள்ளோம்.
மேற்படி பயிற்சி வகுப்பினை மாநில இணைச் செயலாளர் திரு.இரா.வரதராஜன் மற்றும் திரு.மு.மண்ணு பொதுக்குழு உறுப்பினர் அவர்கள் நடத்தினர்.. இன்றைய நிகழ்வாக வணிக உதவியாளர்களுக்கு வாரியத்தைப் பற்றியும், 1.வருகைப் பதிவேடு 2. தாமத வருகைப் பதிவேடு 3.Current & Despatch Register கையாள்வது மற்றும் சிறுவிடுப்பு, ஈட்டிய விடுப்பு. மருத்துவ விடுப்பு, மற்றுமுள்ள விடுப்புகள், பயண பட்டியல், கடிதங்களுக்கு மேலொப்பம் எப்படி எழுதுவது, ஒப்புகை கடிதம் எழுதுவது, என்பது பற்றி விளக்கப்பட்டது. அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வாரிய நடைமுறைகள், மின் உபயோகிப்பாளரிடம் எப்படி கனிவுடன் பேசுதல், வாரியத்திற்கு இழப்பு இல்லாமல் வருமானத்தை எப்படி உயர்த்துவது, மின்சார இணைப்புகளை கால தாமமில்லாமல் உடனுக்குடன் ஆய்வு செய்து வழங்குவது, பிரிவு பணியாளர்களிடம் அதிகாரிகளிடம் எப்படி நடந்து கொள்வது, பிரிவில் நடைபெறும் நல்ல விஷயங்கள், அனைத்தும் தாங்களாகவே ஏற்று நடத்துவது போன்றவற்றை மாநில பொருளாளர் திரு.கா.இரவி அவர்கள் எடுத்துரைத்தார்
இதனை மற்ற வட்டங்களுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளோம்.இது குறித்து தங்களது மேலான ஆலோசனைகள் ஏதும் இருந்தால் தெரியபடுத்துமாறு கோருகிறோம்.
No comments:
Post a Comment