Saturday, December 14, 2013

தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் அவர்களுக்கு பாராட்டுதல்

சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் அவர்களுக்கு  தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது

 சென்னை: கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநாடு நிறைவு நாளில், சிறப்பாக செயல்பட்ட, கலெக்டர்கள் உட்பட 24 பேருக்கு, முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.


கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, கடந்த, 11ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது மாடியில் துவங்கியது. நேற்று மாலை, 4:00 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக, சிறப்பாக செயல்பட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, விருது வழங்கப்பட்டது




முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களுக்கு, விரைவாக தீர்வு கண்டதில், துறை ரீதியாக,   முதல் விருது  தமிழ்நாடு மின்வாரியத் தலைவர், திரு. கே.ஞானதேசிகன் அவர்களுக்கும்,  இரண்டாவதாக  சென்னை மாநகராட்சி கமிஷனர், விக்ரம் கபூர், மூன்றாவதாக மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குனர், சந்திரமோகன் ஆகியோர், முறையே, முதல், மூன்று இடங்களைப் பெற்றனர். 


No comments:

General Continuance post upto 28.02.2025 in Villupuram EDC

Gen. Continuance post in Villupuram EDC