Saturday, August 24, 2013

வாரியத் தலைவருடன் அனைத்து சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் சாராம்சம்

வணக்கம்
                   இன்று (24.08.2013) அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக வாரியத் தலைவரை சந்தித்தோம்.  நமது சங்கத்தின் சார்பாக  நானும் திரு.சு.பாரி   மாநில இணை செயலாளர் அவர்களும் சென்றிந்தோம்.  பேச்சு வார்த்தையில்  21 மாதமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு, போன ஒப்பந்தந்தில் விடுபட்ட கோரிக்கைகள் மற்றும் அவுட் சோர்சீங்க் முறையை கைவிடுமாறு பேசப்பட்டது.
                  மதிப்பிற்குரிய வாரிய தலைவர் அவர்கள் யார்  தூத்துக்குடியில் மருத்துவர் இல்லை என தெரிவித்து கடிதம் அளித்தது, அதன் மீது உடனடி நடவடிக்கை எடுப்ப தாக   தெரிவித்தார். கடிதம் நமது சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்டது என்பதனை தெரிவித்தோம். அதற்கு நன்றி தெரிவித்தோம்.

          நமது சங்கத்தின் சார்பாக வாரியத்தில் நிரப்ப படாத பதவிகள் பற்றியும், குறைவான ஊழியர்களை வைத்து   எப்படி  அதிகபடியான தற்போதிய  வேலைப்பளு ஏற்றுகொள்ள முடியும் எனவும், ஆகவே  பதவி களை  நிரப்பி பேச்சுவார்த்தை நடத்தி  வேலைப்பளு அமுல்படுத்தவும் அல்லது வேலைப்பளு  இல்லாத   ஊதிய உயர்வு வழங்கும்படியும், மேலும் பதவி உயர்வுக்கான கால வரம்பை குறைத்திடவும் பேசப்பட்டது.

     மேலும் இதன் தொடர்ச்சியாக  நிதித்துறை  செயலர் அவர்களை சந்தித்தோம். அவரிடம் தென் மாவட்டங்களில் மின் கட்டண வெள்ளை அட்டை வழங்கப் படுவதில் குறைகள் உள்ளது. ஆகவே புதியதாக அச்சடித்து   தரக் கோரினோம். உடனடி நடவடிக்கை எடுப்ப தாக  தெரிவித்தார்.

                                                                                                            கு . செல்வராஜ்
                                                                                                       பொது  செயலாளர்

No comments: