Monday, July 16, 2012

Our union E.C/G.C Meeting Highlights Demands

அன்புடையீர்  வணக்கம்
                 
                     நமது  சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கடந்த 13, 14.07.2012 அன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. அதில் பல கோரிக்கைகள் இடம் பெற்றன. அதில் சில  முக்கியமான கீழ்காணும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன

1.தமிழ்நாடு மின் வாரியத்தில் 4000 களப்பணி உதவியாளர்கள் பதவிகளை நேரடி தேர்வின் மூலம் நிரப்பிட உள்ளதாக அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இம்மாநில பொதுக்குழு  தனது பாராட்டினையும், நன்றியினையும்  தெரிவித்துக் கொள்கிறது .

2. மேற்படி  தேர்வில் மின் வாரியத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு  செய்திட வாரியத்தையும் மற்றும் மாநில அரசையும் இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது 



3. மின் அளவி பற்றாக்குறை காரணமாக புதிய மின் அளவி இல்லாமையால் மின் உபயோகிப்பாளர்கள் வருடக்கணக்கில் Average Billing செய்வதால் மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் அட்டை பட்டியல் பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் தேவையற்ற வாக்குவாதங்களை களைய வாரியமே மின் அளவி  அளித்திட வேண்டுவதுடன், புதிய மின் இணைப்புகள் ஐ.எஸ். ஐ முத்திரை இட்ட எந்த மின் அளவிகளையும்  வாங்கி பொருத்திட அனுமதி அளித்திட வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

4.01.12.2011 முதல் அமுல்படுத்திட வேண்டிய புதிய ஊதிய உயர்வு  பேச்சு வார்த்தையினை துவக்கிட வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

5.மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி போனஸ் வழங்காத காரணத்தினால் நிரந்தரம்  செய்ய விடுபட்டவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளித்திடவும், மேலும் தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் உயர் நீதி மன்ற உத்திரவு பெற்ற அனைத்து  ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக நிரந்தரம் செய்திடவும் வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

6. அனைத்து பிரிவுகளில் காலியாக உள்ள அடிப்படை பணியிடங்களை நிரப்பிட (இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அலுவலக  உதவியாளர்கள் மற்றும் பெருக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் போன்ற பணியிடங்கள் )  வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

7. கணக்கிடு பணியாளர்கள் கணினிகள் அடிக்கடி செயல் இழந்து விடுவதால் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய   வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

8. விலையில்லாத மின்சாரம் அனைத்து  மின் வாரிய ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் மாதம் 200 யூனிட்கள் வழங்கிட வாரியத்தையும் மற்றும் மாநில அரசையும் இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது

9. தமிழ்நாடு மின் வாரியத்தில் 35 ஆண்டுக்காலம் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்திற்கு மற்ற சங்கங்களுக்கு அலுவலக  இடம் ஒதுக்கி  உள்ளதைப் போல, அலுவலக  இடம் ஒதுக்கீடு செய்திட வாரியத்தை இம்மாநில பொதுக்குழு வேண்டிக் கொள்கிறது


                    மேலும் பல கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது

    இம்மாநில பொதுக்குழு சீரும் சிறப்புமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்  பாராட்டினை தெரிவித்துக் கொள்கிறேன்

                                                                                                              இப்படிக்கு
                                                                                                      (கு.செல்வராஜ்)
                                                                                             மாநில பொது செயலாளர் 



No comments: