Tuesday, December 8, 2020

வாரியத் தலைவருடன் 07.12.2020 அன்று ஜனதா சங்கம் பேசிய பேச்சுவார்தையின் கோரிக்கை கடிதம் மற்றும் சாராம்சம்

 தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இன்று 07.12.2020 வாரியத் தலைவரை மாலை 4 மணி முதல் 4 30 மணி வரை சந்தித்து நமது சங்க கோரிக்கைகள் அளித்து அது  குறித்து பேசப்பட்டது.கூட்டத்தில் நமது பொதுச் செயலாளர் கு.செல்வராஜ், மாநில பொருளாளர் திரு.கா.இரவி, மாநில இணைச் செயலாளர் திரு.இரா. வரதராஜன்   ஆகியோர் கலந்து கொண்டனர்.




வாரியத் தலைவருடன் பேசும்போது 01.  S.L.S 24.04.2020 முன்பாக விண்ணப்பம் அளித்த அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்,  02. இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்,  03. ஊர் மாற்றம் விண்ணப்பம் அளித்தவர்களுக்கு உடனடியாக வழங்கிடவும், 04. கேங்மேன் மற்றும் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை  உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும், 05.கணக்கீட்டாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், 06. வாரியத்திற்கு வருவாய் ஈட்டும் சில ஆலோசனைகளை நமது சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது 07. முத்தரப்பு ஒப்பந்தத்தினை சங்கங்களுடன் பேசி உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும் எனவும் 08. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைப்பினை ஏற்படுத்தி அவர்களது குறைகளை களைய வேண்டுமெனவும் கூட்டுக் குழுவின் சார்பாக அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்தும்  மற்றும் சில விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது


Ċ



No comments:

Tripartite Agreement on 12-02.24 Uniin/ Associations Signing copy

Tripartite Agreement Signing copy